நீட் தேர்வு தொடர்பாக 4 மாநில முதல்வர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!
காங்கிரஸ் முதலமைச்சர்கள் மற்றும் மம்தா பானர்ஜியை போன்று கேரளா, ஒடிஷா, தெலங்கானா, ஆந்திர மாநில முதலமைச்சர்களும் நீட்தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அந்த மாநில முதலமைச்சர்களுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் மாணவர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு மற்ற மாநிலங்களுடன் இணைந்து நீட் மற்றும் ஜெஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார்.






