புதிய கட்சிகளை சேர்க்கும் தி.மு.க.வுக்கு தோல்வி பயம்- டி.டி.வி தினகரன் விமர்சனம்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், என்.டி.ஏ கூட்டணியில் தொகுதிப்பங்கீடு அனைத்து கட்சிகளும் திருப்திபடும் வகையில் இருக்கும்.
தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி மோதல் மற்றும் இழுபறியில் இருந்து கடைசியில் நிம்மதியாக முடித்துவிட்டோம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். புதிய கட்சிகள், புதிய நபர்களை விரட்டி விரட்டி சேர்ப்பதில் இருந்து அவர்கள் உறுதியாக தோல்வி பயத்தில் இருக்கிறார்கள்.
எங்கள் கூட்டணியில் தொகுதிப்பங்கீடு திருப்தியான முறையில் இருக்கும் என்று கூறியுள்ளார்.





