மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் – கட்சி அமைப்பு மாற்றம் குறித்து ஆலோசனை
மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. 800-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில், கட்சியின் அமைப்பு ரீதியான மாற்றங்கள், மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்டவை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகவும், திமுக உட்கட்சித் தேர்தல் நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
திமுக மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை 100க்கு மேல் உயர்த்த திட்டம். இளைஞர்கள், மகளிருக்கு அதிக வாய்ப்பு அளிப்பது குறித்து ஆலோசனை நடைபெற உளள்தாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




