--- --:--:-- --

ரசிகர் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை – நடிகர் சிவகார்த்திகேயன்

3

டிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்ட நிகழ்ச்சியொன்றில், ரசிகர் ஒருவரின் கமெண்டிற்கு அவர் செய்த இந்த ரியாக்சன் இணையத்தில் வைரலானது. சென்னையில் தனியாரின் புதிய தங்க மாளிகை திறப்பு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். இவ்விழாவில் பங்கேற்ற சிவா, சமீபகாலமாக முதலமைச்சர் விஜய் போலப் பாரம்பரிய பட்டு வேட்டி சட்டை உடையில் கலந்துகொண்டார்.

 

 

அப்போது கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் “வருங்கால முதல்வரே” என உரத்த குரலில் அழைத்தார். அதைக் கேட்ட சிவகார்த்திகேயன் மேடையில் புன்னகையுடன் “உஷ்” எனச் சைகை செய்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் அரசியல் பாதையை நோக்கிச் செல்வது அதிகரித்து வரும் சூழலில், தற்போது சிவகார்த்திகேயனுக்கும் அரசியல் எண்ணம் உள்ளதா? என்ற விவாதம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon