திமுக,காங்கிரஸ் பிரமுகர்கள் சென்ற 5 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து..!
நெல்லையில் திமுக காங்கிரஸ் பிரமுகர்கள் சென்ற 5 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்திற்குள்ளானது. இதில் 6 பேருக்கு படுகாயம் அடையும்ஏற்பட்டுள்ளது .நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் கிரகாம்பெல் தனது ஆதரவாளர்களோடு நான்கு கார்களில் தேர்தல் பரப்புரைக்காக நாங்குநேரி சென்றுகொண்டிருந்தார்.
அவர்களது கார்களுக்கு முன்னால் காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமாரின் கார் சென்று கொண்டிருந்தது.5 கார்களும் ஒன்றன்பின் ஒன்றாக சென்று கொண்டிருக்க நான்குவழிச் சாலை மேம்பாலம் அருகே முன்னால் சென்ற காங்கிரஸ் பிரமுகரின் கார் ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்து காரை நிறுத்தியுள்ளார்.
இதை எதிர்பாராத பின்னால் வந்த கார் ஓட்டுநர்கள் சடன் பிரேக் அடித்து கார்களை மிக அருகருகே நிறுத்தியதாக தெரிகிறது. ஆனால் கடைசியாக வந்த கார் ஓட்டுனர் பிரேக் பிடிக்காமல் முன்னால் வந்த கார் மீது மோத ஒன்றின் பின் ஒன்றாக மோதிக்கொண்டன.
கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த சம்பவத்தில் 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.






