தி.மு.க வேட்பாளர் அப்துல்லா இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்..!
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் அப்துல்லா இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அதிமுகவின் முகமது ஜான் கடந்த மார்ச் மாதம் காலமானார்.
காலியாக உள்ள அந்த இடத்தை நிரப்புவதற்காக இடைத்தேர்தல் செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் என அறிவித்தது. இதனையடுத்து மாநிலங்களவை உறுப்பினரான தேர்தலில் திமுக வேட்பாளராக அப்துல்லா அறிவிக்கப்பட்டார்.
திமுக தகவல் தொழில்நுட்பஅணி துணைச் செயலாளராக பதவி வகித்துள்ள அப்துல்லா தற்போது திமுகவின் வெளிநாடுவாழ் தமிழர்கள் அணி இணை செயலராக உள்ளார்.
இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் திமுக வேட்பாளர் அப்துல்லா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார்.







