--- --:--:-- --

தி.மு.க. வெற்றி பெற கூட்டணி கட்சிகள் உழைக்க வேண்டும்- தமிமுன் அன்சாரி

7

கூட்டணி ஆட்சி, பலத்துக்கு மீறிய தொகுதிகளைக் கூட்டிக் கேட்பது போன்ற நெருக்கடிகளை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என மஜக தலைவர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.

 

மதுரையில் இது குறித்து பேசிய அவர், 2026 தேர்தலில் பாசிச சக்திகளிடம் இருந்து தமிழ்நாட்டை பாதுகாப்பது தான் முதன்மை தேவையாக இருக்கிறது. தி.மு.க தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றியை பெற வேண்டும் என்ற அடிப்படையில் கூட்டணி கட்சிகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

Right Menu Icon