--- --:--:-- --

மானாமதுரை அருகே 800 ஆண்டு பழைமை வாய்ந்த தெப்பக்குளத்தை மீட்டெடுத்த மாவட்ட ஆட்சியர்

மானாமதுரை அருகே 800 ஆண்டு பழைமை வாய்ந்த தெப்பக்குளத்தை மீட்டெடுத்த மாவட்ட ஆட்சியர்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது தஞ்சாக்கூர் கிராமம். இங்கு சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இந்த கிராமத்தில் பிரதான தொழிலாக நெல். பருத்தி கரும்பு போன்றவைகள் விவசாயம்செய்து வருகின்றனர்.

 

இங்கு சமூக ஆர்வலராக இருப்பவர் பாலசுப்பிரமணியன் இவர் தஞ்சாக்கூர் கிராமத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டுவருகின்றனர். அதுமட்டுமல்ல அதன் சுற்றியுள்ள கிராமத்திற்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பல நல்ல திட்டங்களை செய்துவருகிறார்.

 

தமிழக அரசு மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அவர்களை சிவகங்கை மாவட்டத்திற்கு பணி அமர்த்தியதற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் அரசுக்கு நன்றிதெரிவித்துள்ளனர்.

 

தற்போது தஞ்சாக்கூர் கிராமத்தில் 800 ஆண்டுகளுக்கு பழைமையான முருகன்கோவிலுக்கு சொந்தமான தெப்பகுளத்தை சீர்ரமைக்க மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் பாலசுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் அரசு நிதியில் இருந்து 1 கோடி ரூபாயை கோவிலுக்கு வழங்கினார்.

 

இதனால் பொதுமக்கள் ஆட்சியரிக்கு நன்றி தெரிவித்தனர்.
பின்னர் அரசு நிதியுடன் தெப்பகுளத்தை புதுபித்துவந்தனர். பிறகு பக்கதர்கள் நிதி திரட்டி கோவில் பணிக்காக கொடுத்துள்ளர் என்பது குறிப்பிடதக்கது. இந்த முருகன்கோவிலில் 16 அடி உயரமுள்ள தேர்வேலைகளை சமூக ஆர்வலர் பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

 

அதன் அருகே பெருமாள் கோவில் கட்டுமான வேலைகளை கவனித்துவருகிறார். சமூக ஆர்வலர் இந்த பெருமாள் கோவிலில் மஹா விஷ்ணுவின் பத்து அவதாரமும் இங்கு சிலைகளாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டிலேயே இங்குதான் பெருமாளின் பத்து அவதாரமும் உடைய பெருமாள் கோவில் என்ற பெருமையை பெற்றுவுள்ளது .

 

இந்த தஞ்சாக்கூர் கிராமத்தையே கோவில் நகரமாக மாற்றிவருகிறார். சமூக ஆர்வலர் பாலசுப்பிரமணியன் ஆட்சியரின் உத்திரவின் படி கிராமத்தில் பல நல்ல திட்டங்களை செய்துவருவால் பொதுமக்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றுள்ளார்.

 

Leave a Reply

Right Menu Icon