--- --:--:-- --

இயக்குனர் ஆயிஷா சுல்தானா மீது தேசத் துரோக வழக்குப்பதிவு..!

11

ட்சத்தீவுகளின் நிர்வாக அதிகாரியை கண்டித்து தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசியதற்காக இயக்குனர் ஆயிஷா சுல்தானா மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

லட்சத்தீவுகளில் நிர்வாக அதிகாரி அறிவித்துள்ள சட்ட திருத்தங்களும் நடைமுறைகளும் மக்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் உணர்வுகள் பழக்க, வழக்கங்களுக்கு எதிராக திருத்தங்கள் கொண்டு வரப்படுவதாக இயக்குனர் ஆயிஷா தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.

 

மலையாள தொலைக்காட்சி விவாதத்தில் ரபோல் பட்டேலை லட்சத்து மக்களுக்கு எதிரான ஆயுதமாக மத்திய அரசு பயன்படுத்துவதாக ஆயிஷா பேசுகிறார்.

 

இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து லட்சத்தீவு பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவிலும் பாஜகவினர் அளித்த புகாரில் ஆயிஷா மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon