--- --:--:-- --

அடுத்த 10 ஆண்டுகளில் எய்ட்ஸ் நோயை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்..!

10

டுத்த 10 ஆண்டுகளில் எய்ட்ஸ் நோயை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகளை எல்லோரும் தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

 

ஐக்கிய நாடுகள் சபையில் 75வது கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் நோய் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லை என்றார். எய்ட்ஸ் கண்டறியும் பரிசோதனை மற்றும் சரியான சிகிச்சைகள் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடம் அதிகளவில் ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

அதற்கான போராட்டத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார் .அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இந்த வைரஸை முழுமையாக அழிக்க தான் தற்பொழுது மிகத் தீவிரமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon