--- --:--:-- --

பிரைவேட் ஜெட்ல ஹனிமூன் சென்றனரா ரவீந்தர் – மஹாலட்சுமி தம்பதி..!

6

தொகுப்பாளினியாக இருந்து பின்னர் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மஹாலட்சுமி. இவருக்கும் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

 

இன்ப அதிர்ச்சி கொடுத்த இவர்கள் திருமணம் குறித்து பெரியளவில் பேசப்பட்டது. மேலும் அவர்களும் தொடர்ந்து அவர்களின் திருமணம் குறித்து பேட்டியளித்து வருகின்றனர்.

 

இதற்கிடையே சமூக வலைதளத்தில் ஆக்டிவாக பதிவிட்டு வரும் ரவீந்தர் தற்போது ரசிகர்களுக்கு விளக்கம் அளித்து ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.ஆம், விமானத்தின் அருகில் நின்றபடி ரவீந்தர் – மஹாலட்சுமி இருவரும் செல்பி எடுத்து கொண்டுள்ளனர். மேலும் அதற்கான விளக்கத்தையும் பதிவிட்டு இருக்கிறார் ரவீந்தர்.

 

அதன்படி “தயாரிப்பாளர் ரவீந்தர் தனது மனைவியுடன் ஹனிமூனுக்கு பிரைவேட் ஜெட்டில் சென்றனர். தயவுசெய்து அப்படி யாரும் போடாதீங்க டா.திருச்சி பக்கத்துல டால்மியாபுரம் குலதெய்வ கோவிலுக்கு போறேன், செஞ்சிடாதீங்க இந்த போட்டோவை” என கூடவே விளக்கத்தையும் அளித்திருக்கிறார் ரவீந்தர்.

Right Menu Icon