--- --:--:-- --

நடிகர் தனுஷின் பிறப்பு சான்றிதழை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு

1

நடிகர் தனுஷின் பிறப்பு சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலூரை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷை தங்கள் மகன் என்றும் மாதம் தோறும் 60 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனவும் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

 

இதனை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் கதிரேசன் தரப்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

அதில் தனுஷ் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழ் போலியானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் முத்துராமன் தனுஷின் பிறப்புச் சான்றிதழை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon