நூதன நிபந்தனையுடன் பெண் மருத்துவரை திருமணம் செய்த துணை ஆட்சியர்
திருநெல்வேலியில் நூதன நிபந்தனையுடன் பெண் மருத்துவரை துணை ஆட்சியர் ஒருவர் திருமணம் செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ஒட்டன் காடு கிராமத்தை சேர்ந்தவர் சிவகுரு பிரபாகரன். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் பல்வேறு இடர்களுக்கு மத்தியில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று தற்போது திருநெல்வேலியில் துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் தனது ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை அரசுப் பள்ளியில் தமிழ் மொழி வழியில் பயின்றார். தனது கிராமத்தின் மீது அதிக பற்று கொண்ட சிவகுரு பிரபாகரன் அப்போது அப்பகுதி இளைஞர்களின் உதவியுடன் அந்த கிராம மேம்பாட்டிற்கான பணிகளை மேற்கொண்டார்.
இந்நிலையில் அவருக்கு பெற்றோர் திருமணம் செய்ய முயற்சித்தபோது தனக்கு வரப்போகும் மனைவி மருத்துவராக இருக்க வேண்டுமெனவும் வாரம் இரண்டு நாட்கள் தனது கிராமத்தை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு இலவச மருத்துவம் பார்க்க வேண்டும் எனவும் நிபந்தனை விடுத்திருந்தார்.
இதற்கு பல பெண்கள் சம்மதிக்காத நிலையில் சென்னை நந்தனம் கல்லூரியில் கணித பேராசிரியர் மகன் கிருஷ்ண பாரதி நிபந்தனைக்கு சம்மதம் தெரிவித்தார். இதனை எடுத்து இருவருக்கும் தஞ்சாவூரில் அண்மையில் திருமணம் நடைபெற்றது.





