--- --:--:-- --

குளத்தில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம்..!

9

திருவள்ளூர் அருகே குளத்தில் உயிரிழந்த ஐந்து பெண்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முகஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

 

திருவள்ளூர் மாவட்டம் கரும்பு குப்பம் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவில் குளத்திற்கு வந்த கிராமத்தை சேர்ந்த சிலர் துணி துவைக்க சென்றுள்ளனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த நர்மதா என்ற 12 வயது சிறுமி குளத்தில் எதிர்பாராதவிதமாக சிக்கியுள்ளார்.

 

அவரை காப்பாற்ற சென்றவர்களும் ஒருவர் பின் ஒருவராக குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். மொத்தம் மூன்று சிறுமிகள் உட்பட ஐந்து பெண்கள் உயிரிழந்த நிலையில் இந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த நிகழ்வில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

 

Leave a Reply

Right Menu Icon