இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.முருகபூபதி தலைமையில் இராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெறு என கோரிக்கை வைத்தும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட எனவும் விவசாயிகளின் கடனை ரத்து செய்ய வேண்டும் என்றும் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வயது வரம்பை கொண்டு வராதே எனவும் மாநில அரசு பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இந்த கொராண காலத்தில் நடத்தக்கூடாது.
எனவும் மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் தொழிலாளர்களுக்கு உதவித் தொகையாக ரூபாய் பத்தாயிரம் வழங்கிட வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.முருகபூபதி தலைமையில் நடைபெற்றது.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் களஞ்சியம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் என்.ஏ.காதர்,பாலாமணி,பசும்பொன் நகரைச் சேர்ந்த துரைசாமி ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை எழுப்பினர்.






