--- --:--:-- --

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தீர்ப்பில் மகிழ்ச்சி : தூத்துக்குடியில் பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்!!

17

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடியில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதியில்லை என்றும், ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கிடையாது என்ற வரலாற்று சிறப்பு மிக்க இந்தத் தீர்ப்பு பல்வேறு தரப்பினரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

குறிப்பாக ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடியில் பல காலமாக போராட்டம் நடத்திய பொதுமக்கள், இந்தத் தீர்ப்பு வெளியானவுடன் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அத்துடன் நகரின் முக்கியப் பகுதிகளில் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Leave a Reply

Right Menu Icon