“தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதியில்லை..!!” உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதியில்லை என்றும், ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பெரும் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தை ஒடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். போராட்டத்தை ஒடுக்க நடத்திய இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் சர்ச்சையானது. ஸ்டெர்லைட் விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதாகக் கூறி தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடும் இந்த உத்தரவை பிறப்பித்தன் தமிழக அரசின் உத்தரவை எதிர்த்தும், ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரியும் ஸ்டெர்லைட் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, இந்த ஆலைக்கு எதிராக ஆரம்பம் முதலே சட்டப் போராட்டம் நடத்தி வரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் வாதாடினார்.
பரபரப்பான நடைபெற்ற இந்த வழக்கு விசாரனை கடந்த ஜனவரி மாதமே நிறைவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தது சென்னை உயர் நீதிமன்றம் . இந்திலையில் 8 மாதங் கரைக்கு பிறகு இன்று காலை தீர்ப்பு என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தூத்துக்குடியில் நேற்றிரவு முதல் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்
இன்று காலை 10.30 மணிக்கு ஸ்டெர்லைட் வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும் எனவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் எனவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கிடையாது என சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்புக்கு, ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள், பொது மக்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர் மட்டுமின்றி அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.







