தமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா அலை: ஒரே நாளில் 33,361 பேர் தொற்று…474 பேர் பலி!
தமிழகத்தில் இன்று 33,361 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 78 ஆயிரத்து 621 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 30,063 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 474 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் அரசு மருத்துவமனையில் 275 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 199 பேரும் உயிரிழந்துள்ளனர். கொரோனா சிகிச்சைப்பெற்று வந்தவர்களில் இணை நோய் இல்லாதவர்கள் 125 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 22 ஆயிரத்து 289 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கோவையில் மட்டும் 4734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு முதல் இடத்தை பிடித்துள்ளது. சென்னையில் ஏற்கெனவே 3,561 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் 2,779 ஆக உள்ளது.






