கட்டணமில்லா பேருந்து சேவையை அதிகரிக்க முடிவு..!
மகளிருக்கான கட்டணமில்லா சேவை பஸ்களை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. சென்னையில் பெண் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால், கூடுதல் பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது.
இதற்காக வருவாய் குறைவான 174 மாநகர சிவப்பு நிற விரைவுப் பேருந்துகள், விடியல் பயணத் திட்டத்திற்கு மாற்றப்பட உள்ளன. இத்திட்டத்தின் கீழ் 63% பெண்கள் பயணித்துள்ளனர். மாநிலம் முழுவதும் இந்த நடவடிக்கை விரிவுப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.





