காருக்குள் சடலம்..கேரள தொழிலதிபர் கொலை..!
கேரள தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கேரளாவை சேர்ந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் சாலையோரம் சென்ற காருக்குள் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் சடலமாக கிடந்தது அதிர்ச்சி ஏற்படுத்தியது.
விசாரணையில் கல்குவாரி தொழில் மூலமாக 10 லட்சம் ரூபாய் பலத்துடன் கன்னியாகுமரி வந்தது தெரிய வந்தது. காரில் இருந்த மர்ம நபர் ஒருவர் பணப்பையுடன் இறங்கி செல்வது தெரிய வர போலீசார் விசாரணை தீவிரபடுத்தினார். முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது.
தொழிலதிபர் தீபுவை கொன்றது கேரளாவை சேர்ந்த பிரபல ரவுடி சசிகுமார் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சசிகுமாரின் துணையுடனே சசிகுமார் நடத்தி வந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது. ரவுடி சசிகுமாரை கைது செய்திருக்கும் போலீசார் அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.





