கண்டெய்னரில் குவியல் குவியலாகக் கிடந்த பிணங்கள்..!
பல்கேரியா நாட்டில் கைவிடப்பட்ட சரக்கு லாரி கண்டெய்னரில் 18 ஆப்கானிஸ்தான் அகதிகள் பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், ஈரான், சிரியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்து வருவதை தடுத்து வருகின்றனர்.
இருப்பினும் துருக்கியில் இருந்து பல்கேரியாவிற்கு நுழைந்த கண்டெய்னர் லாரி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நின்று கொண்டிருப்பதாக போலீசருக்கு தெரிந்தது. இதையடுத்து அந்த கண்டைனரை திறந்து பார்த்த பொழுது அதில் 52 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதில் 18 பேர் சடலங்கலாக மீட்கப்பட்டனர். 34 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அனைவரும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த அகதிகள் என்றும் அவர்கள் அனைவரும் துருக்கியில் இருந்து பல்கேரியா வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோதமாக தஞ்சமடைய முயற்சித்ததும் தெரியவந்தது.






