தமிழர்களை அடித்து பணத்தை பறித்த வடக்கன்..!
கரூர் பேருந்து நிலையத்தில் தமிழரை தாக்கி பணத்தை திருட முயன்ற வட மாநில இளைஞர்களை போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர்.
செல்வராஜ் என்பவர் பணி முடிந்து கரூர் மாநகர பேருந்து நிலையத்திலிருந்து வீட்டிற்கு செல்ல திருச்சி செல்லும் பேருந்தில் இடம் பிடித்துள்ளார். அப்பொழுது வட மாநில இளைஞர்கள் இருக்கை பிடிப்பது தொடர்பாக செல்வராஜுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
செல்வராஜ் மீது தாக்குதல் நடத்திய வட மாநில இளைஞர்கள் அவரிடம் இருந்து பணத்தையும் பறித்துள்ளனர். போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வட மாநில இளைஞர்களை சரமாரியாக அடித்து உரைத்தனர்.






