திருமணத்தை மீறிய உறவு மாமனார் மாமியாருக்கு தெரிந்ததால் மருமகளின் சதி திட்டம்..!
திருமணத்திற்கு மீறிய உறவு இருந்ததால் விஷம் வைத்து மாமனார், மாமியாரை மருமகள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்தவர் வேல்முருகன்.
இவருக்கும், இவரது மனைவிக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஹரி என்பவர் தான் கீதா. திருமணத்திற்கு மீறிய உறவு இருந்ததாக தெரிகிறது. இதனையறிந்து அதிர்ச்சி அடைந்த கீதாவின் மாமனாரும் மாமியாரும் அவரை கண்டித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த கீதா மாமனார் மாமியாருக்கு எலிமருந்து கலந்த முள்ளங்கி சாம்பாரை உணவாக அளித்துள்ளார். இதில் அவரது மாமனார் மாமியார் மட்டுமின்றி பக்கத்து வீட்டு பத்து வயது சிறுவனும் சாப்பிட்டதில் மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கீதாவையும் அவரது காதலனையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





