--- --:--:-- --

லாண்டிங் ஆகி திடீரென டேக் ஆஃப் ஆனதால் விமான பயணிகள் அதிர்ச்சி..!

8

குஜராத் ஏர்போட்டில் தரையிறங்கிய சில வினாடிகளில் விமானம் மீண்டும் மேல் எழுந்து பறந்தது பயணிகளை பதற்றம் அடைய செய்தது. சண்டிகரிலிருந்து குஜராத் – அகமதாபாத் நோக்கி இண்டிகா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்றது.

 

அதில் கடந்த திங்கள்கிழமை இரவு 8:45 மணியளவில் சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்க வேண்டியிருந்தது. இதனால் பயணிகள் அனைவரும் தங்களது இருக்கையில் இருந்தபடி தயாரானார்கள்.

 

ஆனால் விமானம் தரையிறங்கிய சில வினாடிகளில் உடனே மேல் எழுந்தது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் என்னவென்று தெரியாமல் பதற்றம் அடைந்தனர்.

 

இந்த நிலையில் விமானம் தரையிறங்கும் பொழுது ஏற்பட்ட ஒரு நிலையற்ற சூழலால் உடனடியாக மீண்டும் மேலே பறந்து செல்லும்படி விமானி அறிவுறுத்தியதாக விமான போக்குவரத்து கட்டுப்பாடு அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பயணிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை எனவும் கூறுகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon