--- --:--:-- --

கலப்பு திருமணம் செய்துக்கொண்ட காதலர்கள் ! பாதுகாப்பு கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா

3

சேலத்தில் கலப்பு திருமணம் செய்து கொண்ட காதலர்கள் பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேட்டூரை சேர்ந்த இதய அரசுவும், அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த யாஷினியும் காதலித்து வந்துள்ளனர்.

 

இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இதய அரசுவின் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 13ஆம் தேதி பெற்றோருக்கு தெரியாமல் இதய அரசும், யாஷினியும் திருமணம் செய்து கொண்டனர்.

 

இதனால் இதை அரசுவின் பெற்றோர் கொலை மிரட்டல் விடுப்பதாக இளம் தம்பதியினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டனர். மேலும் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்குமாறு இளம் தம்பதியினர் வேண்டுகோள் விடுத்தனர்.

Leave a Reply

Right Menu Icon