--- --:--:-- --

அழகு சாதன பொருட்களால் ஏற்படும் அபாயம்..!

2

னிதர்களாய் பிறந்த அனைவருக்கும் தங்களை அழகாய் காட்டிக் கொள்ள வேண்டும்என்ற ஆசை இருக்கும். அதிலும் குறிப்பாக பெண்களை பற்றி சொல்லவே தேவையில்லை. சமீபகாலமாக மேனியை அழகு படுத்துவதில் இளம்பெண்களுக்கு நிகராக வயது முதிர்ந்த பெண்களும் ட்ரெண்டிங்கில் உள்ளனர்.

 

முன்பெல்லாம் மருதாணி போடுவது பல வீடுகளில் அதிகபட்ச அழகு சாதனப் பொருட்களாக இருந்து வந்தது. திருமணம் மற்றும் வீட்டு விசேஷங்களுக்கு முதல் நாள் இரவில் மருதாணி இலைகளை அரைத்து வீட்டில் உள்ள பெண்கள் ஒருவருக்கொருவர் கைகளில் மருதாணி போட்டுக் கொள்வார்கள்.

 

மறுநாள் காலையில் செக்கச் சிவந்து காணப்படும் கைகளை பார்ப்பது ஒரு தனி சுகம் தான். ஆனால் இவையெல்லாம் டைனோசர் காலத்திலேயே அழிந்துவிட்டதாக விபரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இன்றைய காலத்து பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள மெஹந்தி, லிப்ஸ்டிக் போலீஸ் என்று இன்ஸ்டன்ட் அழகை நாடிச் செல்கின்றன.

 

அடையாளம் தெரியாதவாறு இந்த பொருட்கள் அவர்களை மாற்றி விடுகிறது. ஆனால் மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பதற்கேற்ப இவை அனைத்தும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய பொருட்கள் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

 

உதட்டுச் சாயங்களில் லிப் பாம், லிப் லைனர் போன்றவை பெண்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. உதட்டுச் சாயத்தில் ஆபத்தை விளைவிக்கக்கூடியது.பலவித நச்சுத்தன்மை விளைவிக்கக் கூடிய பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

 

இந்த வேதிப்பொருட்கள் ஒரு நாளடைவில் சில பெண்களுக்கு உதடுகளில் ஒவ்வாமை போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. தரமற்று தயாரிக்கப்படும் உதட்டுச் சாயங்களால் பெருமளவில் பாதிப்பு ஏற்படுகிறது.

 

இந்தியாவில் மட்டும் 10 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலான லிப்ஸ்டிக்குகள் பயன்பாட்டில் உள்ளன. வெளிநாடுகளைப் பொறுத்தவரை தரக் கட்டுப்பாட்டை முன்னிறுத்தியே உதட்டுச் சாயங்கள் தயாரிக்கப்படுகின்றன.

Leave a Reply

Right Menu Icon