ஆன்லைன் வகுப்பில் நடனம் கற்பிக்கும் ஆசிரியை..!
கொரொனா ஊரடங்கால் பள்ளிகள், கல்லூரிகள் என கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்த நிலையில் அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்க உள்ளன.
இந்நிலையில், திருப்பூரில் ஆன்லைன் வகுப்பு மூலம் 40 மாணவர்கள் பங்கேற்ற நாட்டிய நாடகம் நடைபெற்றது. திருப்பூரை சேர்ந்த நடன பள்ளி ஆசிரியர் ஒருவர் தன்னிடம் ஆன்லைனில் பரதம் பயிலும் மாணவர்களை ஒருங்கிணைத்து திருப்பாவையில் சிறப்பை விளக்கும் நாட்டிய நாடகம் ஒன்றை வடிவமைத்துள்ளார். இதற்கான அனைத்து வழிமுறைகளும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டன.






