மலாவியை புரட்டி போட்ட பிரடி புயல்..100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியில் புயல் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மலாவியின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கி வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன.
மேலும் பொதுமக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த நிலையில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.





