ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட முக்கிய நபர்களின் சிறை காவலை நீட்டிக்க சுங்கத்துறை தீவிர நடவடிக்கை..!
கேரள தங்க கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட முக்கிய நபர்களின் சிறை காவலை நீட்டிக்க சுங்கத்துறை தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அவர்கள் மீது காபிபோசா எனப்படும் அன்னிய செலவாணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக காபி போசா போர்டில் தாக்கல் செய்யப்படும் மனுவை ஏற்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு அனுமதி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்காக இந்த வழக்கில் இதுவரை பெறப்பட்ட வாக்குமூலங்கள், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து சுங்கத் துறை அறிக்கை தயார் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.







