நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்சேதுபதி..!
மறைந்த நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி அஞ்சலி செலுத்தினார். நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அவரது இல்லத்திற்கு வந்து உடலுக்கு அஞ்சலி செலுத்தி சென்றுள்ளார். படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக மாரடைப்பு ஏற்பட்டதால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும், தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் அவர் உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடலை அங்கிருந்து சென்னை சேத்துப்பட்டில் உள்ள பூர்வீக இல்லத்தில் வைக்கப்பட்டு உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பல்வேறு நடிகர்கள் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில் விஜய் சேதுபதி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.







