காலில் துப்பட்டாவை கட்டிக்கொண்டு தென்னை மரத்தில் ஏறிய நடிகை சஞ்சனாசிங்..!
அஞ்சான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சஞ்சனாசிங். இவர் உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர். இவர் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள் ஒவ்வொன்றும் ஆண்களுக்கு இணையாக இருக்கும். தமிழ் சினிமாவில் சிக்ஸ் பேக் உள்ள நடிகைகளில் சஞ்சனாவும் ஒருவர்.
உடலை வருத்தி பயிற்சி மேற்கொண்டு கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் சஞ்சனா அண்மையில் நாயகர்களே வியந்து போகுமளவுக்கு ஒரு சாகசத்தை செய்தார். சேலத்தில் நண்பர்களுடன் ஒரு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்று சஞ்சனா துப்பட்டாவை காலில் மாட்டிக் கொண்டு அங்கிருந்த தென்னை மரம் ஒன்றில் அனாயசமாக ஏறி அசத்தியுள்ளார்.
தென்னை மரத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு சிறு நடுக்கம் கூட இல்லாமல் அவர் ஏறிய விதம் அவர் மரம் ஏறுதுவதில் முறையான பயிற்சி பெற்றவர் என்பதை சுட்டிக் காட்டியுள்ளது.
தென்னை மரத்தின் உச்சி வரை சென்று இறங்கிய சஞ்சனா தான் இருபது வருடங்களுக்கு முன்பு தென்னை மரத்தில் ஏறிய அனுபவம் இருந்ததாகவும் அந்த நம்பிக்கையில் மேலேறிய தாகவும் தெரிவித்தார்.
சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ரோப், டுப் ஆகியவற்றின் உதவியுடன் ஆக்சன் நாயகர்களாக வலம் வரும் நிலையில் சுடிதாரை வரிந்து கட்டி துப்பட்டாவை காலில் சுருட்டி மரம் ஏறும் நடிகை சஞ்சனாவை சாகச ராணி என்கின்றனர் அவரது நண்பர்கள்.







