தமிழ்நாட்டில் 28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிப்பு..!
தமிழ்நாட்டில் 28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மூன்று வகையான தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளது.
வகை 1 – கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டங்கள்.
வகை 2 – அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்.
வகை 3 – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்.
வகை 1 இல் உள்ள 11 மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு மட்டும் தொடர்ந்து அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வகை 2 இல் உள்ள 23 மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கு நேர நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி. காய்கறி, பழம் மற்றும் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி.உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதி.
மின் வணிக சேவை நிறுவனங்கள் அனைத்தும் 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம். இனிப்பு மற்றும் கார வகை விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் 9 மணி வரை இயங்கலாம். அரசின் அனைத்து அத்தியாவசிய துறைகள் 100 சதவீத பணியாளர்கள் செயல்பட அனுமதிக்கப்படும்.
இதர அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்கள் செயல்பட அனுமதிக்கப்படும். சார்பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாக இயக்கப்படும். அனைத்து தனியார் நிறுவனங்கள் உற்பத்தி 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
ஏற்றுமதி நிறுவனங்கள் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி. இதர தொழிற்சாலைகள் 33% பணியாளர்களின் செயல்பட அனுமதி.
மென்பொருட்கள், பல்புகள், கேபிள்கள், சுவிட்சுகள் மற்றும் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் 5 மணி வரை இயங்கலாம். மிதிவண்டி மற்றும் இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.
ஹார்டுவேர் கடை 9 மணி முதல் 5 மணி வரை செயல்படலாம். வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் 9 மணி முதல் 5 மணி வரை செய்யலாம். வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.
கல்வி புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். காலணிகள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி. மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற உபயோக பொருட்களின் விற்பனை மற்றும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்படும்.
மின் பணியாளர், பிளம்பர், கணினி பழுது நீக்குபவர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் வீடுகளுக்கே சென்று பழுது நீக்கம் செய்யலாம். செல்பேசி மற்றும் அதனை சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். அனைத்து வகையான கட்டுமான பணிகளும் அனுமதிக்கப்படும். பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாக பணிகள் அனுமதிக்கப்படும்.
காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும் பார்வையாளர்கள் இல்லாமல் திறந்த வெளியில் விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்படுகிறது. திரையரங்குகள் தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் செல்ல அனுமதி. வாடகை டாக்ஸி ஓட்டுனர் தவிர 3 பயணிகளும் ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டுமே அனுமதி. வீட்டுவசதி நிறுவனம், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி.






