10 ரூபாய்க்கு டீ சர்ட் விற்பனை என்ற விளம்பரத்தால் மக்கள் கூட்டம்..!
மதுரையில் 10 ரூபாய்க்கு டீ சர்ட் விற்பனை என்ற விளம்பரத்தால் ஜவுளிக்கடையில் மக்கள் அதிகளவில் கூடினர். விதிகளை பின்பற்றாததால் கடையை காவல்துறையினர் பூட்டிவிட்டு சென்றனர்.
ஜவுளி கடை தங்களது இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சலுகைகளை துணிகளை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்திருந்தது. அதன்படி டீசர்ட் உள்ளிட்டவற்றை பத்து ரூபாய்க்கு விற்பனை செய்வதாக அறிவித்திருந்தது.
இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து துணிகளை வாங்கிச் சென்றனர். தனிமனித இடைவெளி போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படாமல் இருப்பது தெரியவந்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என்று எச்சரித்த காவல் துறையினர் கடையை பூட்டிவிட்டு சென்றனர்.







