--- --:--:-- --

நடிகை கஸ்தூரிக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு..!

1

டிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதிய தாயளன் உத்தரவிட்டுள்ளார். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்களை இழிவாக பேசியிருந்தார். இது தொடர்பாக 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், கஸ்தூரியை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

 

ஐதராபாத்தில் நடிகை கஸ்தூரியை கைது செய்த காவலர்கள் அண்மையில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கஸ்தூரிக்கு வரும் 29-ஆம் தேதி வரை எழும்பூர் நீதிமன்றம் நீதிமன்றக் காவல் விதித்திருந்தது. இந்த வழக்கில் பிணை கோரி கஸ்தூரி தரப்பில் அவரின் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்திருந்தார்.

 

இதற்கிடையே, இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் ஐந்தாவது குற்றவியல் நீதிமன்ற மேஜிஸ்திரேட் தயாளன் கேட்டார். அப்போது கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்க காவல்துறை ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இதனால் அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

 

முன்னதாக, தனக்கு ஆட்டிசம் பாதித்த குழந்தை இருப்பதால் அவரை பார்த்துக்கொள்ள பிணை வழங்க வேண்டும் எனக் கூறி கஸ்தூரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதி தயாளான் கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

Right Menu Icon