--- --:--:-- --

திடீர் நெஞ்சு வலி..சாதுரியமாக யோசித்து உயிரை பணயம் வைத்து 20 உயிர்களை காத்த பஸ் டிரைவர்..!

2

டலூர் மாவட்டம் புவனகிரியில் அரசு பேருந்து ஓட்டி வந்த ஓட்டுனருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிஞ்சிப்பாடியில் இருந்து சிதம்பரம் நோக்கி 20 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.

 

புவனகிரி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற பொழுது சிவகுமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. வலியை சமாளித்துக் கொண்டே புவனகிரி பேருந்து நிலையம் வரை பேருந்து இயக்கிய சிவக்குமார் பயணிகளை பத்திரமாக இறக்கி விட்டார்.

 

பின்னர் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்த புவனகிரி காவல்துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் சிவகுமாரை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஓட்டுனர் சிவகுமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

 

Right Menu Icon