--- --:--:-- --

ரயில் முன் தள்ளி மாணவியை கொன்ற சதீஷுக்கு நீதிமன்ற காவல்..!

1

சென்னையில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். மாணவி சத்யா கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த சதீஷை கைது செய்த காவல்துறையினர் அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

 

அப்போது குழந்தையின் முகத்தை மறைத்து அழைத்து வந்த காவல்துறையினருக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருபத்தி எட்டாம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து அவரை முகத்தை மறைக்காமல் காவல்துறையினர் அழைத்து சென்றனர்.

 

அப்போது கொலையாளிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படும் என வழக்கறிஞர் முழக்கமிட்டனர். இதனையடுத்து மாணவி சத்ய பிரியாவின் வீட்டிற்கு சென்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆறுதல் தெரிவித்தார்.

Right Menu Icon