--- --:--:-- --

டிவின்ஸ் பேபிக்கு கோவிட் -19, கொரொனா என பெயரிட்ட தம்பதி!

2

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த இளம் தம்பதி தங்களுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கோவிட் -19, கொரொனா வைரஸ் என பெயரிட்டுள்ளனர். கொரோனா வைரஸ் அதனால் ஏற்படும் ஆபத்தையும், அது உயிர்களை பலிகொண்டு உலகையே அச்சுறுத்தி வருகிறது.

 

இந்த நிலையில் கடந்த 26ஆம் தேதி இரவு ராய்ப்பூர் அரசு மருத்துவமனையில் ப்ரீத்தி வர்மா என்ற பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. ஆண் குழந்தைக்கு கோவிட்-19 என்றும், பெண் குழந்தைக்கு கொரொனா என்றும் தம்பதியர் பெயரிட்டுள்ளனர்.

 

உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த இந்த தம்பதி பணி நிமித்தமாக ராய்ப்பூரில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர். ஊரடங்கால் எதிர்கொண்ட சிரமங்களை குறைக்கும் வகையில் குழந்தைகளுக்கு இந்தப் பெயரை சூட்டியது ஆக ப்ரீத்தி வர்மா தெரிவித்துள்ளார்.

 

பின்னாட்களில் மன மாற்றம் ஏற்பட்டால் குழந்தைகளின் பெயரை மாற்ற வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon