இளம் வயதிலேயே தாத்தா பாட்டி ஆன தம்பதி..!
இங்கிலாந்தில் 34 வயதுடைய மனைவியும், 35 வயதுடைய கணவனும் பேரக் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் ஜெனிவா மற்றும் ரிச்சர்ட். ஜெனிக்கு தற்போது 34 வயதாகிறது. அவருடைய கணவருக்கு 35 வயதாகிறது.
இந்த தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர். அதில் 17 வயதான மூத்த மகள் கடந்த ஜூன் மாதம் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதனால் இங்கிலாந்து நாட்டில் இளம் தாத்தா பாட்டியாக இருவரும் மாறிவிட்டனர்.
தங்களின் பேரக் குழந்தையை தூக்கிக்கொண்டு இவர்கள் வெளியே சென்றால் பொதுமக்கள் அனைவரும் அந்த குழந்தையை இவர்களின் குழந்தையாகவே கருதுகின்றனர். இது தங்களின் பேத்தி என்று கூறினால் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர் இங்கிலாந்து மக்கள்.






