திருநெல்வேலியில் முன் பகையால் குடிசை வீட்டிற்கு தீ வைப்பு..!
திருநெல்வேலி மாவட்டம் பனங்குடி அருகே சிவகாமிபுரத்தில் புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த 2 குடிசைகள் முன் பகையால் தீ வைத்து எரிக்கப்பட்டன. பணகுடி அருகே உள்ள சிவகாமி புரத்தில் சுபாஷ் என்பவர் புறம்போக்கு நிலத்தில் குடிசை கட்டி குடி இருந்து வந்துள்ளார்.
இது தொடர்பாக சிலருடன் முன்பகை இருந்து வந்த நிலையில் சுபாஷ் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தபோது பேன்சன் என்பவர் சதீஷ் குடிசை வீட்டை தீ வைத்து எரித்து விட்டதாக புகார் எழுந்துள்ளது.







