கடலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் நாளை ஆய்வு மேற்கொள்கிறார்..!
கனமழை மற்றும் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆய்வு மேற்கொள்கிறார். கடலூர் மாவட்டத்தில் மட்டும் புரவி புயலால் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் விளை நிலத்தில் மழைநீர் தேங்கியுள்ளது.
அங்கு இன்று மத்திய குழு ஆய்வு செய்த நிலையில் நாளை முதல் அமைச்சர் சென்று பார்வையிட உள்ளார். அங்கு பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திப்பார் என கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கும் முதலமைச்சர் செல்லவுள்ளார்.







