--- --:--:-- --

கொரொனா காரணமாக பிலிப்கார்ட் நிறுவனத்தின் சேவைகள் நிறுத்தம்..!

7

கொரொனா பரவாமல் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட் தனது சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது. அமேசான் இந்திய நிறுவனம் தனது சேவைகள் அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது.

 

இதனை அடுத்து தற்போது பிலிப்கார்ட் நிறுவனமும் தனது இணையதள பக்கம் மற்றும் செயலியில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இது ஒரு கடினமான நேரம் என்றும் முன்பு எப்போதும் இதுபோல இருந்ததில்லை என்றும் அதனால் வீடுகளில் இருந்து வெளியேறாமல் தேசத்திற்கு உதவுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தனது இணையதளத்தில் இருந்து பொருட்கள் பட்டியலை நீக்கியுள்ள ஃபிலிப்கார்ட் பேமெண்ட் மட்டும் வைத்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon