--- --:--:-- --

கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர் வீடு செல்ல மறுப்பு..!

1

கன்னியாகுமரியில் குடும்பத்தினருக்கு கொரொனா பாதிப்பு சரியாகத காரணத்தால் நோய்த்தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட நபர் வீட்டிற்கு செல்ல மறுப்பு தெரிவித்துவிட்டார். கன்னியாகுமரியில் பாதித்த 16 பேரில் இரண்டு ஆண்கள் சிகிச்சைக்கு பிறகு தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. அதில் ஒருவரின் குடும்ப உறுப்பினர்கள் 5 பேருக்கு கொரொனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

ஐந்து பேரில் 88 வயது மூதாட்டிக்கு முதல் பரிசோதனை முடிவில் தொற்று சரியாகி விட்டதாக தெரிய வந்தது. ஆனால் இரண்டாவது பரிசோதனையில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பில் இருந்து மீண்ட நபரும் வீடு திரும்ப மறுத்து விட்டார். இதனைத் தொடர்ந்து ஒருவரை மட்டும் அதிகாரிகள் மருத்துவர்கள், ஊழியர்கள் கைதட்டி மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Right Menu Icon