கொரொனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!
சென்னையா கொரொனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து தமிழகம் வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த 45 வயது உடையவருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவருக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த அவர் சிகிச்சைக்கு பிறகு நேற்று முன்தினம் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் அவர் மீண்டும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மீண்டும் கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




