டெல்லியில் ஆக்ரா பகுதியில் கொரொனா தொற்று பாதிப்பு அதிகம்!
தாஜ்மஹாலுக்கு பெயர் போன ஆக்ரா உத்தர பிரதேச மாநிலத்தின் கொரொனா ஹாட் ஸ்பாட்டாக மாறியுள்ளது. டெல்லி மாநிலத்தில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்கு ஆய்வு நடத்திய சுகாதார அதிகாரிகள் ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்த மட்டும் 20 பேருக்கு கொரொனா பரவியதை கண்டுபிடித்து அதற்கு சீல் வைத்தனர்.
இன்றைய நிலவரப்படி உத்திரப்பிரதேசத்தில் 550 பேருக்கு கொரொனா தொற்று பரவியது. 140 பேர் ஆக்ராவை சேர்ந்தவர்கள் என அரசு தெரிவித்துள்ளது. கடந்த 7 நாட்களில் மட்டும் ஆக்ரா மாவட்டத்தில் 47 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை சுமார் ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு கொரொனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதுடன் ஆக்ரா நகரில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட ஹாட் ஸ்பாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன.







