--- --:--:-- --

தமிழகத்தில் இன்று 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 39 பேர் பலி!

2d8c7e47-d144-4e48-8b93-7de5c5289bd9

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிய நிலையில், கடந்த ஏழு நாட்களாக 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

 

நேற்று இதுவரை இல்லாத அளவில் 2710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 62,087 ஆக அதிகரித்தது.

 

இந்நிலையில் இன்று 2516 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 64,603 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 1,227 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் மொத்தம் 35,339 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்று 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 11 பேர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்கள். இதனால் மொத்த எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது.

 

இன்று 25148 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 9,44,352 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.
இன்று 23921 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 9,00,712 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon