ஐஸ்கிரீமில் கொரொனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..!
சீனாவில் ஐஸ்கிரீமில் கொரொனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பீஜிங் அருகே உள்ள டியான்ஜின் நகரில் உள்ள ஒரு உணவு தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிக்கப்படும் ஐஸ்கிரீமில் கொரொனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த நிறுவனம் மூடப்பட்டு ஊழியர்கள் அனைவருக்கும் கொரொனா பரிசோதனை நடத்தப்பட்டது. எனினும் ஐஸ் கிரீமில் இருந்து அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கொரொனாபரவியதா என்ற தகவல் எதுவும் இல்லை.







