கனடா பிரதமர் மனைவிக்கு கொரானோ..! தன்னையும் 14 நாட்கள் தனிமைப்படுத்த ஜஸ்டின் ட்ரூடோ முடிவு!!
கொரானோ அச்சுறுத்தல் உலக நாடுகளின் தலைவர்கள் பலரையும் அலற வைத்துள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவின் மனைவி சோஃபிக்கு கொரானோ தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் தனிமைபடுத்தப்பட்டுள்ளார். இதனால் தானும் இரு வாரங்களுக்கு தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கொரானோ வைரஸ் தொற்று பீதி, உலக சரித்திரம் இதுவரை கண்டிராத கடும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர் காலத்தில் கூட இப்படி ஒரு அபாய நிலைமை இருந்திருக்குமா? என்று கூட கேள்வி எழுப்பும் நிலைமைக்கு உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வருகிறது இந்த கொரானோ .
கொரானோ பிடியில் சிக்காமல் இருந்த பொது இடங்களில் கூட வேண்டாம். வெளியூர், வெளிநாடு பயணம் வேண்டும். அவசியம் இன்றி வெளியில் செல்ல வேண்டாம். ஒருவருக்கொருவர் கை குலுக்க வேண்டாம். பேசும் போது கூட ஒரு மீட்டர் இடைவெளி தேவை என ஏராளமான அறிவுறுத்தல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதனால் உலகின் பல நாடுகளிலும், வெளியில் மக்கள் நடமாட்டமே குறைந்து வெறிச்சோடி காணப்படுகின்றன. விளையாட்டுப் போட்டிகள் பலவும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. கொரானோவால் உலக பொருளாதாரம் அதல பாதாளத்துக்கு சென்று விட்டது. பங்குச் சந்தைகள் முன்னெப்போதும் இல்லாத சரிவை சந்தித்துள்ளன.கடும் சரிவால் இந்தியப் பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் சிறிது நேரம் நிறுத்தப்படும் அளவுக்கு அபாயத்துக்கு சென்றது.
இந்த கொரானோ உலக நாடுகளின் தலைவர்களையும் விட்டு வைக்கவில்லை. அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரானோ சோதனைக்கு உட்படுத்த வேண்டிய நிலைக்கு ஆளானார். அவருடன் கை குலுக்கிய பலருக்கும் இந்த அச்சம் ஏற்பட்ட நிலைமை தான் இதற்கு காரணம். ஈரான் மற்றும் பிரிட்டன் நாடுகளின் சுகாதார அமைச்சர்களுக்கே இந்த கொரானோ உறுதி செய்யப்பட்டு, தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். இதனால் உலகத் தலைவர்கள் பலரும் ஒருவருக்கொருவர் கை குலுக்குவதை கைவிட்டு, இந்திய பாரம்பரியப் படி கைகூப்பி வணங்கும் பழக்கத்துக்கு மாறியுள்ளனர்.
தற்போது கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூ டோவின் மனைவி சோஃபியாவுக்கும் கொரானோ தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் இந்தத் தொற்று மனைவி மூலம் தமக்கும் பரவி விடக் கூடாது என்பதால் தாமும் 14 நாட்களுக்கு தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு செய்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




