--- --:--:-- --

மூன்றாம் பாலினத்தவர் அனைவருக்கும் மூன்று மாதங்களில் கொரொனா தடுப்பூசி..!

1

மூன்றாம் பாலினத்தவர் அனைவருக்கும் மூன்று மாதங்களில் கொரொனா தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்யும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தங்களுக்கு கொரொனா நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என தடுப்பூசியும் செலுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி மூன்றாம் பாலினத்தவர் கிரேஸ் பானு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆஜரான தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மூன்றாம் பாலினத்தவருக்கு முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்குவதாகவும் இரண்டாம் தவணை விரைவில் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

 

இதை ஏற்று நீதிபதிகள் மூன்று மாதங்களில் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon