--- --:--:-- --

ஜூபிளி டெக்ஸ் குரூப் ஆப் கம்பெனிஸ் நிறுவனத்தில் 700 தொழிலாளர்களுக்கு  கொரோனா தடுப்பூசி முகாம்..!

9

ஜூபிளி டெக்ஸ் குரூப் ஆப் கம்பெனிஸ் நிறுவனத்தில் பணிபுரியும் 700 தொழிலாளர்களுக்கு  கொரோனா தடுப்பூசி முகாம் போலீஸ் உதவி கமிஷனர் வெற்றிவேந்தன் தொடக்கி வைத்தார்.

 

திருப்பூர், புது பஸ்நிலையம், காட்டன் மில் ரோடு, பாப்பா நகரில் இயங்கி வரும் ஜூபிளி டெக்ஸ் குரூப் ஆப் கம்பெனிஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், தொழிலாளர்களுக்கு கோவிட் 19 கொரோனா தடுப்பூசி போடும் முகாம் அக்கம்பெனி வளாகத்தில் நடந்தது.

 

முகாமிற்கு ஜூபிளி டெக்ஸ் குரூப் ஆப் கம்பெனிஸ் நிறுவனத் தலைவர் வி.எம்.கந்தசாமி தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர்கள் பாலகிருஷ்ணன், தர்மமூர்த்தி, அஷோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருப்பூர் மாநகர போலீஸ் உதவி கமிஷனர் வெற்றிவேந்தன் கோவிட் 19 தடுப்பூசி முகாமை தொடக்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது : சிலஆண்டுகளுக்கு முன்பெல்லாம் 75 தடுப்பூசிகள் வந்தால் 50 பேர்கள்தான் போடுவார்கள். 25 ஊசிகள் மீதமாகும். இப்போது கொரோனாவின் வீரியத்தால் மக்களே முன்வந்து வரிசையில் நின்று தடுப்பூசி போடுகிறார்கள். தடுப்பூசி போடுவதுடன் நின்றுவிடக்கூடாது.

 

புதிது புதிதாக கொரோனா வைரஸ் உருமாறி அதிக வீரியத்துடன் வருகிறது. இதனால் மரணம் ஏற்படுகிறது. அதனால் தடுப்பூசி போட்டாலும் முகத்தில் மாஸ்க் என்னும் முகக்கவசம் அணிய வேண்டும், கைகளுக்கு கிருமி நாசினி அடிக்க வேண்டும். பொது இடத்தில் கூடக்கூடாது.

 

நமது உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்றார்.
இதைத்தொடர்ந்து கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் செயல்பட்டு வரும் ராசி ஹாஸ்பிட்டல் நிறுவனர் டாக்டர் தீபா ஜெயராமன் தலைமையில் மருத்துவ குழுவினர் ஜூபிளி டெக்ஸ் குரூப் ஆப் கம்பெனிஸ் நிறுவனத்தின் பல்வேறு கிளை நிறுவனங்களில் பணிபுரியும் 700 தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட்டனர். முடிவில் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ஹரிஹர சுதன் நன்றி கூறினார்.

Leave a Reply

Right Menu Icon