தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 5679 பேருக்கு தொற்று பாதிப்பு… 72 பேர் உயிரிழப்பு!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,679 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று ஒரே நாளில் உயிரிழப்பும் 72 ஆக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம் கடந்த ஓரிரு மாதங்களாகவே ஒரே சீராகவே உள்ளது. தினசரி பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்தும், உயிரிழப்பு நூறுக்குள்ளும் பதிவாகி வருகிறது. தமிழகத்தில் இன்றைய பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று மேலும் 5,679-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 69 ஆயிரத்து 370- ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 72 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,418 ஆக உயர்ந்துள்ளது. .
தமிழகத்தில் தொற்று பாதிப்புடன் 46 ஆயிரத்து 386- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 90.25 சதவிகிதமாக உள்ளது.
சென்னையில் மேலும் 1193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மொத்த பாதிப்பு 1.60 லட்சமாக உயர்ந்துள்ளது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.






